சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில்களில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2026 11:03
சிவகாசி: சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன், சக்தி மாரியம்மன் கோயில்களில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகாசி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் சிம்ம, வெள்ளி ரிஷப, கைலாச பருவத , வேதாள, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். 8ம் நாள் பொங்கல் திருவிழாவும், 9ம் நாள் கயர் குத்து திருவிழாவும், பத்தாம் நாள் தேரோட்டமும் நடைபெறும். இதேபோல் திருத்தங்கல் எட்டு சமூகத்தார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
* திருத்தங்கல் சக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை கட்டப்பட்டு பூஜை நடந்தது. தினமும் அம்மன் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 4, 6 ம் நாள் திருவிழாவில் குத்து விளக்கு பூஜை, 8ம் நாள் திருவிழாவில் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறும்.