சித்திரை அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2026 04:04
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
இன்று சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் கோயிலுக்கு தமிழகத்தில் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடிவிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். இதன்பின் கோயிலுக்குள் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.