சித்திரை அமாவாசை: தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2026 04:04
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத அமாவாசை ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்தில் தேசிய லிங்கேஸ்வரர் சுவாமிகள் அருள் பாலித்தார். கோயிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. தினேஷ் சுவாமிகள் சிறப்பு பூஜைகளை செய்தார். விழாவில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.