Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரை அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி ... திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு அமாவாசை சிறப்பு அலங்காரம் திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூரில் ஜெயந்தன் பூஜை விழா: மாவிளக்கேற்றி பெண்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புத்தூரில் ஜெயந்தன் பூஜை விழா: மாவிளக்கேற்றி பெண்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

17 ஏப்
2026
05:04

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஜெயந்தன் பூஜையை முன்னிட்டு ஏராளமான பெண்கள் யோகபைரவர் சன்னதியில் மாவிளக்கேற்றி வழிபட்டனர். பைரவர் குதிரை வாகனத்தில் திருவீதி வலம் வந்தார்.


குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் இந்திரனின் மகனான ஜெயந்தன் முனிவரின் சாப விமோசனத்திற்காக இத்தலத்தில் யோகநிலையில் எழுந்தருளியுள்ள பைரவரை வழிபட்டார். அதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் சித்திரை முதல் வெள்ளிக்கிழமை ‛ஜெயந்தன் பூஜை’ பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இன்று காலை 9:00 மணிக்கு பைரவர் சன்னதி யாகசாலையில் பாஸ்கர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் அஷ்ட பைரவர் யாக பூஜைகள் நடத்தினர்.  யாகசாலை பூஜைகள் நிறைவிற்கு பின்னர் பூர்ணாகுதி ஆகி தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் புறப்பாடாகி மூலவர் பைவருக்கு சிறப்பு பூஜைகளுடன் அபிஷேகம் நடந்தது. பின்னர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த பைரவருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. திரளாக பக்தர்கள் கூடி தரிசித்தனர். நேற்று காலை முதல் சுற்று வட்டாரக் கிராமத்தினர் பைரவரை தரிசித்தனர். பெண்கள் பைரவர் சன்னதியில் மாவிளக்கேற்றி வழிபட்டு தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். மாலையில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. இரவில் திருநாள் மண்டத்தில் குதிரை வாகனத்தில் உற்ஸவ பைரவர் எழுந்தருளி தீபாராதனை நடந்தது பின்னர் சுவாமி திருவீதி வலம் வந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar