Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ... சின்னாளபட்டி ராம அழகர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் சின்னாளபட்டி ராம அழகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னூரில் முத்துப்பல்லக்கு கோலாகலம்: சயன கோலத்தில் அருள்பாலித்த அம்மன்
எழுத்தின் அளவு:
குன்னூரில் முத்துப்பல்லக்கு கோலாகலம்:  சயன கோலத்தில் அருள்பாலித்த அம்மன்

பதிவு செய்த நாள்

17 ஏப்
2026
05:04

குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் 81வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவ விழாவில் சயன கோலத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


நீலகிரி மாவட்டம், குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான முத்துப் பல்லக்கு ஊர்வலம் இன்று நடந்தது. விழாவில் குன்னூர் வி.பி. தெரு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து செண்டை மேளம் முழங்க, தேவி ரக்ஷா மற்றும் முத்துகாளைகளுடன், கும்ப கலசம் மற்றும் அபிஷேக பொருட்கள் ஊர்வலமாக தந்தி மாரியம்மன் கோவில் எடுத்துவரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் அலங்கார, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மாலையில் அம்மன் திருவீதி உலாவில், அம்மன் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். கருட மகா விஷ்ணு, அனுமன் வடிவமைப்புகள் முன்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நின்று புகைப்படம் எடுத்தனர். இன்னிசை நிகழ்ச்சி வானவேடிக்கை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. அருவங்காடு நாட்டிய நடன மாணவிகள் அம்மன் பாடல்களுக்கு ஏற்ப ஆடிய பரதநாட்டியம் அனைவரையும் கவர்ந்தது. ஏற்பாடுகளை கேரள சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar