பதிவு செய்த நாள்
29
ஏப்
2026
11:04
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழா தேரோட்டம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 20ம் தேதி விநாயகர் விழா மற்றும் 21ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, 22ம் தேதி சூரியபிரபை, சந்திரபிரபை வாகனம், 23ம் தேதி பூத வாகனம், 24ம் தேதி நாக வாகனம், 25ம் தேதி ரிஷப வாகனம் மற்றும் காமதேனு வாகனம், 26ம் தேதி யானை வாகனம், 27ம் தேதி காமதேனு வாகனம் வீதியுலா நடந்தது. இதையடுத்து, 28ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. இதை தொடர்ந்து, நேற்று காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.