உத்தரகோசமங்கையில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய மங்கை பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2026 01:05
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. நேற்று பெரிய தேரோட்டம் நடந்தது. இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிக்கு குதிரை வாகனத்தில் உற்ஸவமூர்த்தியான மங்கை பெருமாள் எழுந்தருளி ராஜகோபுரத்தின் வழியாக சென்று உத்தரகோசமங்கையின் கண்மாய் வழித்தடத்தில் இன்று காலை 6:00 மணிக்கு நீர் நிலையில் உள்ள கரையை கடக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் கோவிந்தா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர். உத்தரகோசமங்கை யாதவர் தெருவில் உள்ள மண்டகப்படியில் சுவாமி எழுந்தருளினார். மங்கை பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நெய்வேத்தியம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டது. பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து பூஜை செய்தனர். மாலை 6:00 மணிக்கு நான்கு ரத வீதிகளிலும் புறப்பட்டு மீண்டும் கோயிலை வந்தடைந்தார். விழாவில் சிவனடியார்களும், ஏராளமான பக்தர்களும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.