உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் தைத் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2013 11:01
திசையன்விளை:உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் தைத் திருவிழா கொடியேற்றம் இன்று நடக்கிறது.உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் தைத் திருவிழா இன்று துவங்கி வரும் 29ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. இன்று அதிகாலை 4 மணிக்கு கொடிபட்டம் யானை மீது ஊர்வலம், காலையில் சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்டபூஜை, வாணவேடிக்கை, 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.தொடர்ந்து விநாயகர் வீதியுலா, உச்சிகால சாயரட்சை அபிஷேகம் மற்றும் பூஜை, இந்திர வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.தினமும் காலையில் விநாயகர், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலாவும் நடக்கிறது.27ம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.மறுநாள் 28ம் தேதி தெப்பத் திருவிழாவும், 29ம் தேதி பஞ்சமூர்த்தி வீதியுலாவும் மற்றும் பல நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.