Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வானுார் வர்ணமுத்து மாரியம்மன் ... வெள்ளியங்கிரி மலையேற நாளை முதல் தற்காலிக தடை வெள்ளியங்கிரி மலையேற நாளை முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேதார்நாத் கோவில் வருமானம் ரூ.71.06 கோடியாக அதிகரிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 கேதார்நாத் கோவில் வருமானம் ரூ.71.06 கோடியாக அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

13 மே
2026
11:05

டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கேதார்நாத் கோவில் வருமானம் கடந்த 2024 – -25ல் 71.06 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 34.32 சதவீதம் அதிகம்.


உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார் நாத், பத்ரிநாத் கோவில்களுக்கு யாத்திரை செல்வது சார்தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த யாத்திரை அக் ஷய திருதியை நாளான ஏப்ரல் 19ல் துவங்கியது. இந்நிலையில் கேதார்நாத் கோவிலில் நன்கொடை மற்றும் காணிக்கையாக கிடைக்கும் வருமானம் எவ்வளவு என தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி அமித் குப்தா என்ற தன்னார்வலர் கேட்டிருந்தார். இது தொடர்பாக இந்த கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீ பத்ரிநாத் – கேதார்நாத் கோவில் குழு அளித்த தகவல்: கேதார்நாத் கோவிலில் 2023 – -24 நிதியாண்டில் 52.90 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இது, 2024 – -25 நிதியாண்டில் 34.32 சதவீதம் அதிகரித்து 71.06 கோடி ரூபாயானது. கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் 47 கோவில்கள் கோவில் குழு பராமரிப்பில் உள்ளது. இவற்றில், 700 பேர் வரை தற்காலிக மற்றும் நிரந்தர பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு சம்பளமாக 25 கோடி ரூபாய் வரை செலவாகிறது. கோவில் சார்பில் 7 பள்ளிகள் மற்றும் 27 விருந்தினர் மாளிகைகள் நிர்வகிக்கப்படுகின்றன. இவற்றின் பராமரிப்புக்கு கோவில் மூலம் கிடைக்கும் வருவாய் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ஹெலிகாப்டரில் சென்று 21,000 பக்தர்கள் தரிசனம்; கேதார்நாத் உள்ளிட்ட நான்கு கோவில்களுக்கு தரிசனம் செய்ய செல்லும் சார்தாம் யாதிரை இந்த ஆண்டு கடந்த ஏப்., 22ல் துவங்கி நடக்கிறது. இதில் 21,000 யாத்ரிகர்கள் ஹெலிகாப்டரில் சென்று தரிசனம் செய்துள்ளதாக உத்தரகண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இது தவிர பஸ், கார் உள்ளிட்ட வாகன போக்குவரத்து, பாட்டா குப்தகாசி மற்றும் சிர்சியில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. இதில் 17,976 யாத்ரிகர்கள் சென்று தரிசனம் செய்துள்ளனர். இது தவிர வாடகை விமானங்கள் மூலம் 3,974 பேர் சென்று தரிசனம் செய்துள்ளனனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar