ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாத சுவாமி கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2026 10:05
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாத சுவாமி கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம் இன்று காலை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாத சுவாமி கோயில் 1000 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது. இது சிவனின் தேவாரத் தலங்களில் ஒன்றாகும். இங்கு 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட அம்மன் தோ் சேதமடைந்ததால் புதிய தோ் செய்ய அறநிலையத் துறை அனுமதி வழங்கியது. உபயதாரா் நிதியில் ரூ.88.30 லட்சத்தில் 24 அடி உயரம், 12 அடி அகலத்தில் புதிய தோ் செய்யப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் புதிய தோ் வெள்ளோட்டம் இன்று காலை கோலாகமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.