Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காட்டூர் பண்ணாரி மாரியம்மன் ... கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு அபிஷேகம் பூஜை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் சித்திரை ஏகாதசி வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் சித்திரை ஏகாதசி வைபவம்

பதிவு செய்த நாள்

13 மே
2026
03:05

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், சித்திரை மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.


காரமடை அரங்கநாதர் கோவிலில், அதிகாலையில் நடை திறந்து, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை ஆகியவை நடந்தன. நேற்று சித்திரை மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதில் விஷ்வக்க்ஷேனர், புண்ணியாவசனம், கலச ஆவாஹனம் ஆகியவை நடந்தன. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு, பால், தயிர், நெய், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் திரவியங்களால் ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்பு அரங்கநாதர் பெருமாள், வெள்ளி சப்பரத்தில், வெண்பட்டு குடை சூழ மேள தாளங்கள் முழங்க, கோவிலில் வலம் வந்து, ஆஸ்தானம் அடைந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, சிம்மாசனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து உச்சிக்கால பூஜை, சாற்றுமுறை சேவித்து, மகா தீபாராதனை முடிந்து, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி, அர்ச்சகர்கள் திருவேங்கடம், சுரேஷ் நாராயணன், சவுந்தர்ராஜன், மிராசுதாரர்கள், கோவில் செயல் அலுவலர் முத்துசாமி மற்றும் பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar