கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் மஹா விஷ்ணுபதி புண்யகால பூஜை
பதிவு செய்த நாள்
15
மே 2026 06:05
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கடைவீதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், மஹா விஷ்ணு புண்ணிய கால பூஜையில், இன்று அதிகாலை, 2:30 மணிக்கு பெருமாளுக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. காலை, 5:00 மணிக்கு சிறப்பு ேஹாமங்கள் நடைபெற்றன. பக்தர்கள், கொடிமர நமஸ்காரம் செய்து, 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு, 27 முறை பிரகாரத்தை வலம் வந்து ஒவ்வொரு சுற்றுக்கும், ஒரு பூவை கொடிமரம் முன் வைத்து வேண்டுதலை நிறைவேற்ற வழிபாடு செய்தனர். இந்த புண்ய காலத்தில் மஹாவிஷ்ணுவையும், மஹாலட்சுமியையும் வழிபட்டு வேண்டுதலை கூறி பிரார்த்தனை செய்தனர். * டி. கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், விஷ்ணுபதி புண்ணிய காலத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை, 4:30 மணியில் இருந்து மதியம், 12:00 மணி வரையிலும், மாலை, 5:00 மணி முதல், இரவு, 7:40 மணி வரையிலும் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வந்து வழிபாடு செய்தனர்.
|