மஞ்சூர்: மஞ்சூர் அருகே, 100 ஆண்டு பழமை வாய்ந்த எடக்காடு அய்யன் கோவிலில் கும்பாபிஷேக பூஜை சிறப்பாக நடந்தது.எடக்காடு சூண்டட்டியில் அய்யன் கோவில் உள்ளது. கடந்த 1913ம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் ஆண்டு தோறும் கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகிறது. தற்போது, கோவில் கட்டி 100 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, கோவில் கோபுரங்கள் பொலிவுப்படுத்தப்பட்டு, கும்பாபிஷேக விழாவுக்கு தயார்படுத்தப்பட்டது.நேற்று காலை நடந்த ஹோம குண்டம் பூஜையை தொடர்ந்து, கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அன்னதான நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.