பதிவு செய்த நாள்
21
ஜன
2013
11:01
கோவை: சிங்காநல்லூர் அருகே, நீலிக்கோனாம்பாளையத்தில், ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ணர், தும்பிக்கையாழ்வார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடக்கிறது.இதற்கான விழா, இன்று காலை 9.00 மணிக்கு, மகா சுதர்சன ஹோமம், தன பூஜையுடன் துவங்குகிறது. பிற்பகல் 3.00 மணிக்கு, ராஜகணபதி கோவிலில் இருந்து, தீர்த்த கலசங்கள் வாணவேடிக்கையுடன் கோவிலுக்கு எடுத்து வரப்படுகிறது. மாலை 5.00 மணிக்கு, முதற்கால ஹோமம் நடக்கிறது நாளை காலை 7.00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சியும், 9.00 மணிக்கு, இரண்டாம் கால ஹோமமும், மாலை 5.00 மணிக்கு, கோபுர கலசம் நிறுவுதலும், இரவு 8.00 மணிக்கு, மூன்றாம் கால ஹோமும் நடக்கின்றன. நாளை மறுநாள் காலை 7.00 மணிக்கு, நான்காம் கால ஹோமமும், காலை 9.30 மணிக்கு, கலசங்கள் புறப்பாடும், காலை 10.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள், கோபுர மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு உற்சவ மூர்த்திகள் வீதியுலாவும், இரவு 7.00 மணிக்கு, இன்னிசை கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.