கோயிலுக்குச் செல்வது, கடவுளிடம் விருப்பத்தைச் சொல்லி வேண்டுவது, நிறைவேறினால் நேர்த்திக்கடன் செலுத்துவது இவற்றைத் தான் பக்தி என நாம் நினைக்கிறோம். ஆனால் சுத்த பக்தி இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. சுத்த பக்தர்கள் ஒருபோதும் உலக இன்பங்களை நாடி ஓடுவதில்லை. சொர்க்கவாழ்வு வேண்டும் என்று கடவுளிடம் கேட்பதில்லை. தண்டனையிலிருந்து தப்பிக்க விரும்புவதில்லை. எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பக்திக்காகவே பக்தி செலுத்தும் அருளாளர்களே சுத்தபக்தர்கள். ராமகிருஷ்ணர், சாரதாதேவியார், விவேகானந்தர் போன்றவர்கள் இத்தகைய உன்னதநிலையில் வாழ்ந்தனர்.