கடவுளை பல வடிவங்களில் வழிபடுவது ஏன்? வீட்டில் எத்தனை பலகாரம் செய்தாலும், ஏதோ ஒன்று தான் மிகவும் பிடிக்கும். மற்றதை ஒன்று வீதம் எடுத்துக் கொண்டால், பிடித்ததை நான்கைந்து சாப்பிடுகிறோம். அதுபோல் தான் இஷ்ட தெய்வமும். புராணங்களை வாசிக்கும்போது, குறிப்பிட்ட தெய்வத்தின் வரலாறு மனதுக்கு பிடிக்கிறது. ஒருவருக்கு முருகனை பிடித்துப் போனது என்றால், தெய்வத்தை அந்த வடிவில் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறார். புராணங்கள், கடவுளை ஏதோ ஒரு வடிவத்தில் வணங்க வைக்கும் சாதனங்களாக உள்ளன.