பழநி ரோப்காரில் பழுதான பாகங்கள் மாற்றும் பணிகள் ஜரூர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2013 11:01
பழநி: பழநி மலைக்கோயில் ரோப்காரில் பழுதான உதிரிப்பாகங்கள் மாற்றும் பணிகள் விரைவாக நடைபெறுகிறது. இன்னும் மூன்று நாட்களில் சோதனை ஓட்டம் நடக்கவுள்ளது. பழநி மலைக்கோயில் ரோப்காரில் ஜன.10ல் மாதாந்திர பராமரிப்புபணியின் போது, கீழ்தளத்தில் உள்ள பெரிய "பேரிங் அதன் உதிரிபாகங்கள் பழுதாகி இருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக ரோப்கார் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மும்பையிலிருந்து வாங்கப்பட்ட "புதிய பேரிங் மற்றும்கொல்கத்தாவிலிருந்து வந்துள்ள "பிளாஸ்மிட் பிளாக் போன்றவைகளை பொருத்தும்பணி நடக்கிறது. சோதனை ஓட்டம்: இப்பணிகள் மூன்று நாட்களில் முடிந்த பின், "ரோப்கார் பெட்டிகளில் குறிப்பிட்ட அளவு எடை வைத்து சோதனை ஓட்டம் நடைபெறும். ஆய்வுக்குழு சான்றிதழ் அளித்த பின்னரே பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. தைப்பூசத்திற்குள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.