சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் கோடிலிங்க தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2026 12:06
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்தை முன்னிட்டு பிரம்ம குமாரிகள் சார்பில் கோடிலிங்க தரிசனம், ராஜயோக தியானம் குறித்த பட விளக்க கண்காட்சி நடந்தது. இரவு 7:00 முதல் அதிகாலை 3:00 மணி வரை நடந்த கண்காட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வரும் ஜூன் 7 முதல் 13 வரை சந்திரன் பேலஸ் மஹாலில் மாலை 6:00 முதல் 7:00 மணி வரை ஒரு வாரம் இலவச தியான வகுப்புகள் நடக்க உள்ளன. அனைவரும் பங்கேற்கலாம். சோழவந்தான் பிரம்ம குமாரிகள் அமைப்பு ஏற்பாடு செய்கிறது.