கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் தமிழக முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்
பதிவு செய்த நாள்
12
ஜூன் 2026 03:06
உடுப்பி: தமிழக முதல்வர் விஜய், உடுப்பி மாவட்டத்தின், பிரசித்தி பெற்ற கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் செய்தார். உடுப்பி மாவட்டம், பைந்துார் தாலுகாவில் உள்ள கொல்லுார் மூகாம்பிகை கோவில், மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் என, பலரும் இக்கோவிலை தரிசனம் செய்துள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மூகாம்பிகையின் தீவிர பக்தர். கோவிலுக்கு தங்கவாள் காணிக்கை செலுத்தினார். மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் வந்தார். இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய், இக்கோவிலுக்கு இன்று வருகை தந்தார். தமிழக முதல்வரான பின், தற்போது, முதன் முறையாக கர்நாடகா முதல்வர் விஜய், டில்லியில் இருந்து, மதியம் 12:30 மணிக்கு, சிறப்பு விமானம் மூலம், மங்களூரு சர்வதேச விமான நிலையம் வந்து அங்கிருந்து சாலை வழியாக பைந்துாரின், கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார். கோவில் நிர்வாகம் சார்பில் முதல்வர் விஜய்க்கு சிறப்பு வரவேற்பு, பூர்ணகும்ப மரியாதை செய்யப்பட்டது. கோவிலில் தரிசனம் செய்த முதல்வர், அங்கு நடக்கும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்றார். சாமி தரிசனம் செய்த முதல்வர் விஜய் 1 கிலோ 600 கிராம் எடை கொண்ட வெள்ளி வாளை காணிக்கையாக அளித்தார். பின், மங்களூரு விமான நிலையத்துக்கு திரும்பி, சிறப்பு விமானத்தில் சென்னைக்கு திரும்புகிறார். தமிழக முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு உடுப்பி மாவட்ட போலீஸ் துறையும், மூகாம்பிகை கோவில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
|