Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் தமிழக ... தல்லாகுளம் தர்ம முனீஸ்வரர் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா தல்லாகுளம் தர்ம முனீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன விழா நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன விழா நாளை துவக்கம்

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2026
03:06

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆணி திருமஞ்சன தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.


கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற, பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் நடராஜர் கோயிலில், ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தை தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறும். 14 ம் தேதி சந்திர பிரபை வாகன வீதி உலா, 15 ம் தேதி தங்க சூரிய பிரபை வாகன வீதிஉலா, 16 ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 17 ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா (தெருவடைச்சான்), நடைபெறுகிறது. தொடர்ந்து 18 ம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலாவும்,19 ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலாவு, 20 ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெற உள்ளது. முக்கிய விழாவான தேர் திருவிழா வரும், 21ம் தேதியும், 22 ஆம் தேதி தரிசன விழாவும் நடைபெற உள்ளது. தேர் திருவிழா என்று தேர் வீதி உலா முடிந்த பின்பு அன்று இரவு 8 மணிக்கு, தேரிலிருந்து நடராஜர் சிவகாமசுந்தரி இறங்கி கீழ சன்னதி வழியாக ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி செய்து, ஏக கால லட்சார்ச்சனை நடைபெறும். அதனைத் தொடர்ந்து தரிசன விழா நடைபெறும் 22 ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு, ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பின்னர் மதியம், பஞ்சமூர்த்தி வீதிஉலா சென்று வந்த பின், சுமார் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனம் தரிசனம் நடைபெற உள்ளது. அதன் பின்னர் ஞானகாச சித்சபா பிரவேசம் நடைபெறும். 23 ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கொட்டியூர் சிவன் கோவில் வைசாக மகோத்சவத்தை முன்னிட்டு 14ம் தேதி ரோகிணி வழிபாடு நடக்கிறது.கேரள ... மேலும்
 
temple news
 உடுப்பி: தமிழக முதல்வர் விஜய், உடுப்பி மாவட்டத்தின், பிரசித்தி பெற்ற கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில் வரும் 29ம் தேதி மாங்கனி திருவிழாவை முன்னிட்டு பந்தல் அமைக்கு ... மேலும்
 
temple news
கோவை ; வைகாசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், விரபத்திர சுவாமி கோவிலில், ஜூன், 26ல் கும்பாபிஷேக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar