Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று ஆனி பஞ்சமி; வராகியை வழிபட தடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காலடிப்பேட்டை சிவகெங்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
காலடிப்பேட்டை சிவகெங்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2026
11:06

சென்னை; திருவொற்றியூர், காலடிப்பேட்டை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அருள்மிகு சிவகெங்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


திருவொற்றியூர் காலடிப்பேட்டை அருகே உள்ள ராஜா கடை பகுதியில் சிவகெங்காபுரம் பகுதியில்  அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சிவகெங்கை அம்மன் ஆலயத்தில் மகா  கும்பாபிஷேக விழா மிக விமர்சையாக நடைபெற்றது. கடந்த 16ஆம் தேதி காலை விநாயகர் பூஜை உடன் துவங்கிய கும்பாபிஷேக விழா கோ பூஜை கணபதி ஹோமம் மூலவர் உற்சவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு யாகசாலையில்  யாக குண்டம் அமைத்து புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கலசங்களில் வைத்து முதல் கால யாக பூஜை துவக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை நான்காம் கால பூஜை செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை பூரண நதி செய்யப்பட்டது. பின்னர் விமான கோபுர கலசங்களில் சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் பட்டாச்சாரியார்கள் மற்றும் ஊர் நிர்வாகிகள் பூஜை செய்யப்பட்ட கலசங்களை தலையில் சுமந்து பிரதிஷ்ட்டியாக மங்கல வாத்தியங்கள் முடக்க கோபுர விமானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கலசத்தில் புனித நீரானது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் பரிவார மூர்த்திகளுக்கு பூஜை செய்யப்பட்ட கலச நீரானது அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபா ஆரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் மதியம் கிராம பொதுநல சங்கம் மற்றும் பழனி பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் ஆலய பெண் நிர்வாகிகள் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் பூஜை செய்யப்பட்ட கலச நீர் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வளர்பிறையில் வரும் ஐந்தாம் திதி வளர்பிறை பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. இது முக்கியத்துவம் வாய்ந்த ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவையொட்டி, தெருவடைச்சான் வீதி ... மேலும்
 
temple news
மதுராந்தகம்: சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில், மதுராந்தகம் ஏரி காத்த கோதண்ட ராமர் கோவில் ... மேலும்
 
temple news
அலங்காநல்லுார்: அரியூரில் கொந்திகுளம் அய்யனார் சுவாமி கிடமாட்டு தொழுவகம் கோயில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபை கொடி மரம் அகற்றப்பட்டது.வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar