வடக்கந்தறை பகவதி அம்மன் கோவிலில் நடைதிறப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2026 09:06
பாலக்காடு; பாலக்காடு வடக்கந்தறை திருபுராக்கல் பகவதி அம்மன் கோயிலில் நடை திறப்பு திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ளது பிரசித்தி பெற்ற வடக்கந்தறை ஸ்ரீ திருபுராக்கல் பகவதி அம்மன். இங்கு கடந்த ஜூன் 17ம் தேதி பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடைதிறப்பு விழா வெகு விமர்சியாக நடந்தது. அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கனி காணுதல் சடங்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஹோம கலசாபிஷேகம், பரிகலசாபிஷேகம், கும்பேஷ கலசாபிஷேகம் மற்றும் பிரம்ம கலசாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீகச் சடங்குகளும் சிறப்பு வழிபாடுகளும் மிக விமரிசையாக நடத்தப்பட்டன. இந்தத் விழாவில் கலந்து கொண்ட 12,000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்குத் அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை வேளையில், ஆடை ஆபரணங்கள் அணிந்த யானைகளின் அணிவகுப்புடன் அம்மன் எழுந்தருள, 75-க்கும் மேற்பட்ட வாத்தியக் கலைஞர்கள் கலந்து கொண்ட பஞ்சவாத்தியம் முழங்க காழ்ச்ச சீவேலி நடைபெற்றது.