Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  காஞ்சி கவுசிகேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழையசீவரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் கருடசேவை விமரிசை
எழுத்தின் அளவு:
 பழையசீவரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் கருடசேவை விமரிசை

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2026
07:06

 வாலாஜாபாத்: பழையசீவரம், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ஆனி மாத பிரம்மோத்சவ விழாவில் கருடசேவை உத்சவம் விமரிசையாக நேற்று முன்தினம் நடைபெற்றது.

வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நடப்பாண்டிற் கான ஆனி பிரம்மோத்சவ விழா, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு வெண் பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், போர்வாள் கேடயம் அணிந்து மல்லிகை, மனோரஞ்சுதம் உள்ளிட்ட மலர்கள் சூட்டி ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்து வந்தது. 20ம் தேதி இரவு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை உத்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. விழாவையொட்டி, காலையில் லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கவுசி கேஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காக நடைபெற்ற அதிருத்ர மகா சண்டி யாக ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடந்த ஆனித் திருமஞ்சன தரிசன விழாவில், ஆயிரக்கணக்கில் ... மேலும்
 
temple news
பேரூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா நடந்தது.பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், இந்தாண்டு ... மேலும்
 
temple news
 உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar