திருநெல்வேலி:சுத்தமல்லி ஜெய்மாருதி கோயிலில் நாளை (26ம் தேதி) வருஷாபிஷேக விழா நடக்கிறது. சுத்தமல்லி விலக்கு வ.உ.சி.நகரில் ஜெய்மாருதி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 27 அடி உயர ராஜ கோபுரத்துடன் 12 லக்னத்தை குறிக்கும் வகையில், 12 அடி உயர ஆஞ்சநேயர் சிலையும், 9 நவக்கிரஹங்களையும் குறிக்கும் வகையில் 9 ஆஞ்சநேயர் சிலையும், ராமபிரானின் பட்டாபிஷேக திருக்கோலமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை (26ம் தேதி) காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் நடக்கிறது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு ஹோமங்கள், அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை ஆலய ஸ்தாபகர் ஜெய்மாருதிதாசன் நாராயணன் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.