அயனாவரம் பரசுராமலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ தேரோட்டம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2026 11:06
அயனாவரம்: அயனாவரத்தில் உள்ள அயன்புரம் பரசுராமலிங்கேஸ்வரர் கோவிலில், பிரம்மோத்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு, கோலாகலமாக விமரிசையாக நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் பரசுராமலிங்கேஸ்வரர், பர்வதாம்பிகை எழுந்தருளிய தேரை, பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். விநாயகர், முருகன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள், மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை, தொட்டி உத்சவம் விமரிசையாக நடந்தது. இன்று காலை பல்லக்கு உத்சவமும், மாலை குதிரை வாகன உத்சவமும் நடக்கின்றன.