Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருக்கரணை முனீஸ்வரர் கோவிலில் ... குருவாயூர் கோவிலுக்கு 37 சவரன் மதிப்பிலான தங்கக் கிரீடம் காணிக்கை குருவாயூர் கோவிலுக்கு 37 சவரன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
350 ஆண்டுகளாக மத நல்லிணக்க விழா; முஸ்லீம்களுடன் மொகரம் கொண்டாடும் இந்துக்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 350 ஆண்டுகளாக மத நல்லிணக்க விழா; முஸ்லீம்களுடன் மொகரம் கொண்டாடும் இந்துக்கள்

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2026
10:06

கண்டவராயன்பட்டி; திருப்புத்தூர் ஒன்றியம் வஞ்சினிப்பட்டியில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் வழிபாட்டுன் இந்துக்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்தினர்.

இக்கிராமத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து மொகரம் பண்டிகையை சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடி வருகின்றனர். இந்துக்கள் ‛அல்லாசாமி பூக்குழித் திருவிழா’ என்ற பெயரில் இஸ்லாமியர்களுடன் இணைந்து நடத்துகின்றனர். இங்கு வசிக்கும் இந்துக்கள் விருந்தினர்களுக்கு கறி விருந்து வைத்தும், இஸ்லாமியர்கள் சைவ உணவு உண்டும் விரதம் இருந்தும் விழாவை கொண்டாடினர். மொகரம் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்களால் பாத்தியா ஒதப்பட்டது. அப்பகுதி கிராமத்தினர் மல்லிகை பூ, சா்க்கரை வைத்து இரு கைகளை குவித்து அல்லாவை நினைத்து வணங்கினா்.

பின்பு கூடாரத்தில் தொழுகை நடத்தப்பட்டு, அதிகாலை 4 மணியளவில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பின்னர்  கூடாரம் வாசலில் பெரியதாக வளர்க்கப்பட்ட பூக்குழியை, 3 முறை சுற்றி வலம் வந்தனா். அதன்பிறகு விரதம் இருந்தவர்கள் பலரும் சட்டை அணியாமல் பூக்குழிக்குள் இறங்கி நெருப்பை இரு கைகளால் அள்ளி வாரி இறைத்தனா். அப்போது சுற்றி இருந்த ஆண்கள், பக்தர்கள் இறங்கிய பூக்குழிக்களில் இருந்து மண்வெட்டியால் நெருப்பை அள்ளி பெண்களுக்கு வழங்க, பெண்கள் அதை தங்களது முந்தானையில் வாங்கிச் நெஞ்சில் வைத்து பின்பு கீழே கொட்டி வினோதமான முறையில் வழிபட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். அப்போது கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். பூக்குழியில் உள்ள சாம்பலை பிரசாதமாக அள்ளி, இந்துக்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் பூசி விட்டனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar