கோவை உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2026 10:06
கோவை; ஆனி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் தாயாரின் அருளை பெற்றனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.