கோவை; கோவை கஞ்சி கோனாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரங்கநாதர் கோவிலில் ஆனி மாதம் பூராடம் நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று சிறப்ப வழிபாடு நடைபெற்றது. விழாவில் சுவாமி சயன கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி நீலாதேவி ஆகியவருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.