Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா முருகப்பெருமானுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா முருகப்பெருமானுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

10 நவ
2026
12:11

மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முதலில் ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, பின்பு உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. 


இவ்திருவிழா சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டப்பட்ட பின்பு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினர். காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் திருவிழா நடக்கும் 7 நாட்களிலும் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர்.  தினம் உச்சிகால பூஜை முடிந்த பின்பு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தேன், சர்க்கரை கலந்த தினை மாவு, மாலையில் சர்க்கரை, எலுமிச்சம்பழச் சாரும், இரவு பாலும் இலவசமாக வழங்கப்படும். தினமும் இரவு 7:00 மணிக்கு தந்த தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள் பாலிப்பார். தினம் காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜையும், காலை 11:00 மணி, மாலை 5:00 மணிக்கு சண்முகார்ச்சனையும் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 14 ல் வேல் வாங்குதல், 15-ல் சூரசம்ஹார லீலை, 16- ம் தேதி காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் சட்டத் தேரில் எழுந்தருளி ரதவீதிகள், கிரிவீதியில் தேரோட்டம் நடைபெறும் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு பால் எலுமிச்சைச்சாறு தேன் கலந்த திணை மாவு உள்ளிட்டவைகள் வழங்கப்படும்.  மேலும் சஷ்டி மண்டபத்தில் தினமும் அன்னதானம் கோயிலில் நடைபெறும். பூஜைகளை பக்தர்கள் நேரடியாக காணும் வகையில் பெரிய அளவிலான திரைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.  மேலும் கோயிலில் பக்தர்களுக்கான குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. இதேபோல மாநகராட்சியின் கிரிவலப் பாதைகளில் குடிநீர் வசதி மற்றும் நடமாடும் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சரவணப் பொய்கை பகுதியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா  யாகசாலை ... மேலும்
 
temple news
திருப்போரூர் : புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக ... மேலும்
 
temple news
முருகப் பெருமானை முன்னிறுத்தி கொண்டாடப்படும் முக்கியமான திருவிழா கந்த சஷ்டி. தமிழகம் உள்ளிட்ட ... மேலும்
 
temple news
அன்னூர்: செல்லனுர் சக்தி மாகாளியம்மன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது.அன்னூர் அருகே, செல்லனுர் சக்தி ... மேலும்
 
temple news
நெகமம்: கோவை, கிணத்துக்கடவு வடசித்துார் கிராமத்தில் மயிலந்தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar