Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாடு முழுவதும் கோவர்த்தன பூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவர்தன பூஜை: அனைவரும் மகிழ்ச்சியுடனும், வளமுடனும் வாழ பிரதமர் மோடி வாழ்த்து
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவர்தன பூஜை: அனைவரும் மகிழ்ச்சியுடனும், வளமுடனும் வாழ பிரதமர் மோடி வாழ்த்து

பதிவு செய்த நாள்

10 நவ
2026
12:11

கோவர்தன பூஜையை முன்னிட்டு பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரும் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும், வளமுடனும் வாழ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: கோவர்தன பூஜையை முன்னிட்டு எனது குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். இந்த புனிதமான பண்டிகை உங்கள் அனைவரது வாழ்விலும் புதிய ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் கொண்டு வரட்டும். அனைவரும் மகிழ்ச்சியையும், நற்பேறுகளையும், வளத்தையும் பெற வேண்டும் என்பதே எனது மனமார்ந்த பிரார்த்தனை. கோவர்தன மலையைத் தூக்கியவரும், உயிர்நாடியாகத் திகழ்பவரும், சத்தியத்தின் அடிப்படையில் வீரத்தைப் போற்றியவரும், தம் பக்தர்களின் அச்சத்தைப் போக்குபவருமான இறைவனை நான் வணங்குகிறேன். இவ்வாறு தெரிவித்துளளார்.


கோவர்தன பூஜை என்றால் என்ன?


கோகுலத்தின் தலைவரும், கண்ணனின் வளர்ப்புத் தந்தையுமான நந்தகோபர் இந்திரனுக்காக ஆண்டுதோறும் விழா எடுப்பார். அப்போது நாட்டில் செழிப்பாக மழை பெய்து, காடு, கழனி செழித்து பசுக்கள் தடையின்றி பால் தர வேண்டுமென பிரார்த்திப்பார். கோகுலத்து பசுக்கள் அங்குள்ள கோவர்த்தன கிரியை (மலை) சார்ந்து மேய்ந்தன. பகவான் கிருஷ்ணர் கோகுல மக்களிடம், மலை தானே நம் பசுக்களும் பசுமையான புல்லையும், இதர வகை தீனியையும் தருகிறது. எனவே இந்த மலைக்கு பூஜை செய்யுங்கள், என்றார். கண்ணனின் சொல் மீறாத கோபாலர்கள் அப்படியே செய்தனர். இதனால், இந்திரன் கோபப்பட்டான். மழையை அதிகமாக பொழிவித்து கோகுலத்தை வெள்ளக்காடாக்கினான். பயந்துபோன கோகுல மக்கள் கண்ணனைச் சரணடைய, அவர் கோவர்த்தன மலையை தன் கையால் தூக்கி குடையாகப் பிடித்தார். மக்களும், பசுக்களும் அதன்கீழ் நின்று பிழைத்தனர். கண்ணனின் சக்தியை அறிந்த இந்திரன் அவரிடம் மன்னிப்பு கோரினான். அன்று முதல் கண்ணனுக்கு கோவர்த்தனன் என்ற பெயரும் உண்டானது. இதன்பின் கோவர்த்தன மலைக்கு தொடர்ந்து பூஜைகள் செய்து கண்ணன் அருள் பெற்றனர் கோகுலவாசிகள். கோவர்த்தன மலைக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஏராளமான உணவுகள், பலவகை இனிப்புகள்  தயார் செய்து மலைக்கு அல்லது கிருஷ்ணருக்குப் படைக்கப்படுகிறது. பசுக்களைக் குளிப்பாட்டி, அலங்கரித்து சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா  யாகசாலை ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேசம்: நாடு முழுவதும் இன்று கோவர்த்தன பூஜை பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்போரூர் : புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக ... மேலும்
 
temple news
முருகப் பெருமானை முன்னிறுத்தி கொண்டாடப்படும் முக்கியமான திருவிழா கந்த சஷ்டி. தமிழகம் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar