விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் என்னும் பணி நேற்று நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் சக்திவேல், விழுப்புரம் காந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவார்த்திகள் மற்றும் கோவில் ஊழியர்கள் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.53 லட்சத்து 27 ஆயிரத்து 825 ரூபாய் ரொக்க பணமும், 61 கிராம் தங்கமும், 467 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அறங்காவலர்கள் ஏழுமலை, சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சங்கீதா, மேலாளர் சதீஷ், கணக்காளர் மணி மற்றும் கோவில் ஊழியர்கள் உடன் இருந்தனர்.