தென்காசி: ஆய்க்குடி கம்பிளி கணபதி கோயிலில் நாளை (30ம் தேதி) வருஷாபிஷேகம் நடக்கிறது.ஆய்க்குடி கம்பிளி மகா கணபதி-தட்சிணாமூர்த்தி உடனுறை பேச்சியம்மன் கோயிலில் நாளை (30ம் தேதி) வருஷாபிஷேகம் நடக்கிறது. காலை கணபதி ஹோமம், அபிஷேகம், சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து 31ம் தேதி மற்றும் பிப்.1ம் தேதி கொடை விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்துள்ளனர்.