மேலச்செவல் வேணுகோபால சுவாமி கோயில் லட்சார்ச்சனை துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2013 11:01
திருநெல்வேலி: மேலச்செவல் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயிலில் லட்சார்ச்சனை நேற்று காலை துவங்கியது.மேலச்செவல் ருக்மணி சத்ய பாமா சமேத வேணுகோபால சுவாமி கோயில் லட்சார்ச்சனை விழா நேற்று காலை 10.40 மணிக்கு துவங்கி இரவு வரை நடந்தது.2வது நாளான இன்று(29 ம் தேதி) காலை 10.40 மணி முதல் இரவு 8.15 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. நாளை(30 ம் தேதி) காலை 9 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கி இரவு 7.15 மணி வரை நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.31 ம் தேதி காலை 9.15 மணிக்கு பஞ்ச ஸூக்த ஹோமங்களும், 11.30 மணிக்கு திருமஞ்சன ஆராதனையும், இரவு 10 மணிக்கு கருட சேவையும் நடக்கிறது. முன்னதாக மாலை 5.30 மணிக்கு கடையநல்லூர் ராஜகோபால் பாகவதர் குழுவினரின் பகவான் நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. ஏற்பாடுகளை மேலச்செவல் நற்பணி மன்றம் மற்றும் சென்னை பார்த்தசாரதி, பாளை.ராஜகோபால சுவாமி கோயில் நீலமணி பட்டாச்சார் செய்து வருகின்றனர்.