உலகின் மிக உயரமான அனுமன் சிலை திருவனந்தபுரம் பௌர்ணமிக்காவு கோயிலில் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2026 04:07
திருவனந்தபுரம்; உலகின் மிக உயரமான அனுமன் சிலை திருவனந்தபுரம் பௌர்ணமிக்காவு கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், மையிலடியில் செதுக்கப்பட்ட, ஒரே கல்லில் 38 டன் எடைகொண்ட, 25 அடி உயர ஹனுமன் சிலையை சிறப்பு பூஜைகள் செய்து லாரியில் ஏற்றி எடுத்துச் செல்லப்பட்டது. வழியிலேயே பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். இதனைத்தொடர்ந்து திருவனந்தபுரம் அருகே உள்ள பௌர்ணமி காவு கோவிலில் இந்த உலகின் உயரமான ஹனுமன் சிலை நிறுவப்பட்டது. இந்த அனுமன் சிலை நிறுவப்பட்டதன் மூலம் கேரளாவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக நிகழ்வு நடைபெற்றது. மலையாள மாதமான கர்க்கிடகம் தொடங்கும் நாளன்று இச்சிலை நிறுவப்பட்டதால், ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் 27 அடி உயரமும், 12 ராசிகள் மற்றும் 12 சூரியன்களைக் குறிக்கும் வகையில் 12 அடி உயர பீடமும் கொண்டதாக இச்சிலை அமைந்துள்ளது.