ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2026 04:07
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம் நடந்தது. இக்கோவிலில், பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, கொடியேற்றம், தினமும் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனாபிஷேகம், இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலா நடந்தது. டந்த 23ம் தேதி சுவாமி திருக்கல்யாணமும், 25ம் தேதி தேரோட்டமும் நடந்தது. நேற்று இரவு கோவிலில் விடையாற்றி உற்சவம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. கோவில் குருக்கள் நாகராஜ், சோமு ஆகியோர் பூஜைகளை செய்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.