Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிதம்பரப் பெயர்கள்! படிப்பில் ஆர்வம் உண்டாக..
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
லட்சியத்தை அடைய என்ன செய்வது?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2013
05:01

தொண்டு, தானம், இரக்கமான செயல்கள், ஆகியவற்றின் மூலம் பிறரைச் சந்தோஷப்படுத்தினால், நீங்கள் இன்பத்தை விதைப்பதோடு, இன்பத்தையும் அறுவடை செய்வீர்கள். விதியை உயரிய எண்ணங்களாலும், நற்செயல்களாலும், நற்சிந்தனையாலும் உங்களால் மாற்றியமைக்க முடியும்.

தன்னலமற்ற, பணிவுடைய தொண்டினால் இதயத்தைத் தூய்மைப்படுத்துங்கள். உடம்புக்கு வெளியே கிடைக்கும் இன்பத்தால் ஒரு போதும் நிறைவு கிடைக்காது என்பதை உணரக் கற்றுக் கொள்ளுங்கள்.

அனைத்து தீய பண்புகளும் கோபத்திலிருந்து புறப்படுகின்றன. கோபத்தை அடக்கிவிட்டால், தாமாகவே அனைத்து தீயகுணங்களும் தொலைந்து போகும்.  தீயவர்களைத் தண்டிப்பதையோ, நல்லவர்களை கவுரவிப் பதையோ இறைவன் செய்ய மாட்டான். நாம் செய்த செயல்களே நமக்கு பரிசு அல்லது தண்டனையைத் தருகின்றன.

பகைமை, பேராசை, தன்னலம், பொறாமை ஆகியவற்றை களைவதன் மூலம் இதயத் தோட்டத்தில் அமைதியை வளருங்கள், அப்போது தான் உங்களுடன் இருப்பவர்களுக்கும் அமைதியும், சமாதானமும் கிடைக்கும். உண்மையையும், நேர்மையையும் பின்பற்றினால், உங்கள் லட்சியத்தை அடைவது உறுதி. பெற்றோரை கடவுள் போல் நேசியுங்கள். அனைவரிடமும் அன்பை வளருங்கள். மனித சமுதாயத்தின் மீதுள்ள அன்பு, முதலில் நம் வீட்டிலேயே துவங்குகிறது என்பதை உணருங்கள்.

உங்களை தாக்கும் ஆசைகளும், கஷ்டங்களும் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் பிரார்த்தனையை முழுமையாக நம்புங்கள். பிரார்த்தனையால் ஊடுருவிச் செல்ல முடியாத உறுதியான கோட்டையை உங்களால் கட்ட முடியும். உங்கள் வருங்காலம், தலைவிதி, ஒழுக்கம் இவை அனைத்தும் உங்களின் எண்ணங்கள், செயல்கள் மூலமாகவே அமைகின்றன. வாழ்க்கையில் உயரிய எண்ணங்களை வளர்த்தால் உயரிய ஒழுக்கம் உருவாகும். தீய சிந்தனையால் தீமையே விளையும்.

ஆன்மிகத்துறையில் விரைவாக முன்னேற எண்ணினால் அகிம்சை, சத்தியம், பிரம்மச்சரியம் இவற்றை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மிருக குணத்தைப் போக்கி, மனிதத் தன்மையை கைக்கொள்வதே தெய்வீக வாழ்க்கை. இந்த தூய தன்மையை அனைவரும் அன்றாட வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்க்கையில் உயரலாம். -சிவானந்தர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar