மயிலாடுதுறை சங்கிலி கருப்பசாமி கோயிலில் பால்குட அபிஷேக பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2026 10:08
மயிலாடுதுறை ; ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு சங்கிலிகருப்பசாமி கோயிலில் நடைபெற்ற பால்குட அபிஷேக பெருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு, அரிவாள் மேல் நின்று அருள் வாக்கு சொன்ன பூசாரி, நூற்றுக்கணக்கான புகையிலைசுருட்டு மற்றும் மதுபானங்களை சுவாமிக்கு படையல் இட்டு வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்:-
மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை கிராமத்தில் ஶ்ரீ மகா முக்கண்ஈஸ்வரி, காளிகாதேவி மற்றும் பதினெட்டாம்படி சங்கிலி கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு பதினெட்டாம்படி சங்கில் கருப்பசாமி ஆலயத்தில் பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்வது வழிபாடு மேற்கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு ஆற்றங்கரையில் இருந்து சக்திகரகம் புறப்பட்டது. காளி கருப்பசாமி வேடமணிந்து திருநடனம் புரிந்தவாறு பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்தது. ஒருசில பக்தர்கள் பக்தி வரவசத்துடன் ஆடியவாறு பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து மகாமுக்கண்ஈஸ்வரி, காளிகாதேவி அம்பாளுக்கும், சங்கிலிகருப்பசாமிக்கு சிறப்புஅபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. ஆலயத்தில் அருள் வந்த பூசாரி, பெரிய அரிவாள் மேல் ஏறி நின்று அருள் வாக்கு தெரிவித்தார், தொடர்ந்து நூற்றுக்கணக்கான சுருட்டுகள் மற்றும் மதுபானங்களை கருப்பசாமிக்கு படையல் இட்டு வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.