மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் செப்., 1 முதல் செல்போனுக்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2026 07:08
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் செப்., 1 முதல் செல்போனுக்கு தடை விதித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில், செப்., 1 முதல் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலிலும் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை அமலுக்கு வருகிறது. பக்தர்கள் தங்கள் செல்போன்களை தெற்கு நுழைவு வாயில் அருகேயுள்ள கைப்பேசி பாதுகாப்பு அறையிலும், கிழக்கு பகுதியில் உள்ள கியூ வரிசை மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கைப்பேசி பாதுகாப்பு அறையிலும் ஒப்படைக்கலாம். தரிசனம் முடிந்ததும், பாதுகாப்பு அறைகளில் ஒப்படைத்த செல்போன்களை பெற்றுச் செல்லலாம். கோவில் வளாகத்திற்குள் எந்த பகுதியிலும் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தரிசன ஒழுங்கு மற்றும் கோவில் புனிதத்தை கருத்தில் கொண்டு அமல்படுத்தப்படும் இந்த புதிய நடைமுறைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.