செஞ்சி மாரியம்மன் கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2026 08:08
செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்தனர்.
சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதை முன்னிட்டு ஏராளமான பெண்கள் நோன்பிருந்து மஞ்சள், குங்கும், பழம், பூ உள்ளிட்ட பொருட்களை அம்மனுக்கு வைத்து மாங்கல்ய பாக்யம், குடும்ப நலம், செல்வவளம் வேண்டி வழிபாடு நடத்தினர்.