ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்மன் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2026 08:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் இருந்து கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு சுவாமி அம்மன் புறப்பாடாகி வீதி உலா சென்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆக., 13ல் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. இதனைதொடர்ந்து 17ம் நாள் ஆடித் திருவிழாவான நேற்று கோயில் இருந்து காலை 6:30 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் எழுந்தருளி கெந்தமாதன பர்வதம் மண்டகபடிக்கு புறப்பாடாகினர். அப்போது கோயில் ரத வீதி, திட்டக்குடி வழியாக சுவாமி, அம்மன் வீதி உலா சென்றனர். அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின் மண்டகப்படியில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை முடிந்ததும், இரவு 9 மணிக்கு கோயிலுக்கு திரும்பினர். இந்நிகழ்ச்சியால் நேற்று முழுவதும் கோயில் நடை சாத்தப்பட்டது.