Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் ஆவணி பவுர்ணமி வழிபாடு; ... ஆவணி அவிட்டம்; திருத்தணி முருகன் கோவிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்து ஆவணி அவிட்டம்; திருத்தணி முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்

பதிவு செய்த நாள்

27 ஆக
2026
05:08

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா: அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்புத்துறை அனுமதி பெற வேண்டும்


மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம், சர்பத், குளிர்பானங்கள், நீர்மோர், இனிப்புகள் மற்றும் குடிநீர் வழங்குவோர் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. அன்னதானம் மற்றும் உணவுப்பொருட்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பாதுகாப்பான முறையிலும் தயாரித்து வழங்க வேண்டும். செயற்கை சாயங்கள் பயன்படுத்தக்கூடாது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தாமல், அதற்கு மாற்றாக வாழை இலை, பாக்கு மட்டை மற்றும் தொன்னைகளை பயன்படுத்த வேண்டும்.


உணவு தயாரிக்க தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதுடன், அவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளையும் சரிபார்க்க வேண்டும். அன்னதானம் வழங்கும் இடங்களில் சேரும் உணவுக்கழிவுகளை முறையாக சேகரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் சேர்க்க வேண்டும். மேலும், விழாவையொட்டி தற்காலிகமாக அமைக்கப்படும் குளிர்பான விற்பனை நிலையங்கள், உணவகங்கள் மற்றும் இலவச குடிநீர் பந்தல்களிலும் தரமான குடிநீர் மற்றும் செயற்கை சாயங்கள் இல்லாத உணவுப்பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இலவச அன்னதானம், பிரசாதம், குளிர்பானங்கள், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்குபவர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து, மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழை பெற்ற பின்னரே வழங்க வேண்டும். விதிகளை மீறுவோர் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் பிரிவு 58-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் உணவுப்பொருட்கள் தொடர்பான புகார்களை தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறையின் வாட்ஸ்அப் எண் 94440 42322 மூலம் தெரிவிக்கலாம். அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கான விவரங்களை 0452-2640036 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
அயோத்தி, விஜயதசமியை முன்னிட்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், ஆன்மிகச் ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னையில் வழிபாடு செய்யப்பட்ட துர்கா சிலைகள் சென்னை காசிமேடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar