* இன்பத்தை கொடுப்பது கடவுளின் திருவடி மட்டுமே. அவரைச் சரணடைந்திடு. * ஒளியின்றி எதையும் பார்க்க முடியாது. அது போல ஆராய்ச்சியின்றி ஞானம் தோன்றாது. * நெருப்பில்லாமல் சமையல் இல்லை; ஞானம் இல்லாமல் மோட்சம் இல்லை. * வறுமையும், சொத்தும் விருந்தினர் போல தற்காலிகமானது. * தீய ஆசைகளை ஒழிக்க நல்லவர்களிடம் நட்பு கொள். * உழைப்பால் கிடைத்த பணமே மதிப்பு மிக்கது. * நேரம், இடம் என எதுவும் தியானத்திற்கு தடையாக இருக்கக் கூடாது. * ஐம்புலன்களை கட்டுப்படுத்தினால் மனமும் கட்டுப்படும். * தர்மத்தின் மூலம் மனதை துாய்மைப்படுத்தலாம். * ‘நான்’, ’எனது’ என்ற எண்ணமே துன்பத்திற்கு காரணம். * கிடைத்ததைக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்திடு. * பயனில்லாத ஒரு வார்த்தை கூட பேசாதே. * வாய்ப்பு கிடைத்தும் நல்லதை பேசாதவன் பேசத் தகுதியற்றவன். * யோகி போல தனித்து நின்று வாழப் பழகு. * கடவுளிடம் உன் மனதை முழுமையாக கொடு. அதுவே சிறந்த செயல். * சுயநலத்தை மறந்தால் கடவுளை எளிதாக அடையலாம். * ‘மூச்சுள்ள வரை உன்னை நினைக்க வேண்டும்’ என கடவுளிடம் வேண்டு.