Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தேந்தல் கிராமத்தில் கிருஷ்ண ... சோழவந்தானில் கிருஷ்ண ஜெயந்தி சோழவந்தானில் கிருஷ்ண ஜெயந்தி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் கொடுக்க தடை இல்லை: உயர்நீதிமன்றத்தில் தகவல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் கொடுக்க தடை இல்லை: உயர்நீதிமன்றத்தில் தகவல்

பதிவு செய்த நாள்

06 செப்
2026
12:09

மதுரை: திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் தர்ப்பணம் கொடுப்பதையோ அல்லது வேறு ஏதேனும் மதச்சடங்குகளை மேற்கொள்வதையோ தடுக்கும் எண்ணம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

ஸ்ரீரங்கம் புரோகிதர்கள் சங்க தலைவர் ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த பொதுநல மனு:

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பதற்கு புகழ்பெற்ற இடம். கோயில் நிர்வாகம் மண்டபத்திற்குள் கற்களை நட்டு வைத்துள்ளது.இதனால் எங்களை வெளியேற்றிவிட்டு அந்த இடத்தை கோயில் நிர்வாகம் கையகப்படுத்த வாய்ப்புள்ளதாக சங்க உறுப்பினர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

அம்மா மண்டபத்திற்கு வரும் மக்கள் மற்றும் எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு தேவையான வசதிகள் செய்ய, பாதுகாப்பு வழங்கக்கோரி அறநிலையத்துறை கமிஷனர், கலெக்டர், கோயில் இணைக் கமிஷனருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆனந்தகுமார் ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயில் இணைக் கமிஷனர் பிறப்பித்த உத்தரவில், அந்நிலம் கோயிலுக்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கற்கள் நடப்பட்டன. புரோகிதர்கள் அங்கு தர்ப்பணம் கொடுப்பதையோ அல்லது வேறு ஏதேனும் மதச் சடங்குகளை மேற்கொள்வதையோ தடுக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.

எதிர்காலத்தில் அந்த இடம் தேவைப்பட்டால், சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்’ என தெரிவித்துள்ளார்.

இத்துடன் வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னூர்: திம்மநாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.மொண்டிபாளையம் அருகே ... மேலும்
 
temple news
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், கோதாவரி ஆற்றங்கரையில் 650 கிராமங்களைச் சேர்ந்த 6,233 பழங்குடியின ... மேலும்
 
temple news
குஜராத்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் தலத்தில் இரவு மற்றும் அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி: தமிழகத்தில் ஆதிசங்கரரின் தத்துவக் கருத்துகளும், பிரம்மசூத்திர பாஷ்யமும் பரவலாகப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar