பழநி: பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். கரூர், திருச்சி சேர்ந்த பக்தர்கள் குழுவினர் திருப்புகழ் பாடி வழிபட்டனர்.
பழநி முருகன் கோயிலுக்கு உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் விடுமுறை நாளை முன்னிட்டு வருகை புரிந்தனர். வின்ச் வரிசையில் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். தரிசன வரிசையில் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். வெளிப்பிரகாரத்தில் பக்தர்களுக்கு குடிநீர், பால், பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண மண்டபத்தில் கரூர் திருச்சி சேர்ந்த 300 பக்தர்கள் திருப்புகழ் பாடி பழநி ஆண்டவரை வழிபட்டனர். இதற்கான கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று இருந்தனர். கைடுகள் எனக்கூறி கோயில்களுக்கு எளிதாக செல்லலாம் என பக்தர்களை ஏமாற்றும் போலி நபர்களை கட்டுப்படுத்த கோயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.