Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் கோயில் ... அஜா ஏகாதசி விரதம்: இந்த கதையை கேட்டாலும், படித்தாலும் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்! அஜா ஏகாதசி விரதம்: இந்த கதையை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜராஜன் கால கல்வெட்டு தேரெழுந்துாரில் கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராஜராஜன் கால கல்வெட்டு தேரெழுந்துாரில் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

07 செப்
2026
07:09

சென்னை: மயிலாடுதுறை மாவட்டம், தேரெழுந்துார் வேதபுரீஸ்வரர் கோவிலில், முதலாம் ராஜராஜன் கால கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டுள்ளது.

மத்திய தொல்லியல் துறையின், கல்வெட்டியல் பிரிவினர், தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம், தேரெழுந்துார் கிராமத்தில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில், சமீபத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, இதுவரை நகலெடுக்கப்படாத, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க, கல்வெட்டை கண்டறிந்தனர்.

கோவிலின் அர்த்த மண்டபத்தில் உள்ள துாணில், சோழர் கால தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில், சிவனுக்கு அமுது படைக்க, பொன்னை தானமாக அளித்த தகவல் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து, கல்வெட்டியல் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் கூறியதாவது;

இந்த கல்வெட்டு, கோவிராஜ கேசரிவர்மனான முதலாம் ராஜராஜனின் 18வது ஆட்சியாண்டான, 1003ல் பொறிக்கப்பட்டுள்ளது. அதில், உய்யக் கொண்டார் வளநாட்டில் உள்ள பிரம்மதேயமான திருவழுந்துார் மகாசபையில், திருக் கடவுடை நாயனார் தெய்வத்திற்கு அமுது படைக்க, 21 கழஞ்சு தங்கம், தானமாக வழங்கப்பட்டுள்ளது.

அந்த அறக்கொடையில் இருந்து, கிடைத்த வட்டியில், அமுது படைப்பதற்கான நெல் மற்றும் மற்ற தேவைகளுக்கான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மஹாராஷ்டிராவில் விஜய யாத்திரை மேற்கொண்ட சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar