ஆவணி அமாவாசை; தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2026 05:09
பெ.நா.பாளையம்,: ஆவணி மாத அமாவாசையையொட்டி சின்னமத்தம் பாளையம் ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. விழாவில், ஆலூர் தேசி கவுடர் குல மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேசி கவுடர் குலமக்கள் பொதுநலம் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அர்ச்சகர் சிவ தினேஷ் செய்து இருந்தார்.