பெரியாக்குறிச்சி தக்ஷிண விநாயகர் கோவிலில் விநாயகருக்கு திருக்கல்யாணம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2026 03:09
மந்தாரக்குப்பம்: பெரியாக்குறிச்சி தக்ஷிண விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருக்கல்யாணம் உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது.
மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி தக்ஷிண விநாயகர் கோவிலில் 23ம் ஆண்டு சதுர்த்தி விழாவையொட்டி சுவாமிக்கு தினசரி பூஜை மற்றும் தீபாராதனையும் நடந்தது. நேற்று இரவு திருக்கல்யாணத்தையொட்டி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மணக்கோலத்தில் விநாயகர், சிக்தி, புக்தி சுவாமிகள் சீர் வரிசைகளுடன் பெண் அழைப்பு ஊர்வலம், மாலை மாற்றும் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது. தொடர்ந்து பஜனை பாடல்கள் பாடி சுவாமிகளுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.