புல்லாணி அம்மன் கோயிலில் மார்ச் 18ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2013 12:02
கீழக்கரை: திருப்புல்லாணி அருகே புல்லாணி அம்மன் கோயிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. கும்பாபிஷேகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், திருப்பணிக்குழு தலைவர் வக்கீல் திருமலை சடகோபன் தலைமையில் நடந்தது. மார்ச் 18ல் கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் பட்டர் ஜெயராம பட்டர், தேவஸ்தான அலுவலர் (ஓய்வு) கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி தலைவர்கள் முனியசாமி (திருப்புல்லாணி), புல்லாணி(தாதனேந்தல்), கிராம தலைவர்கள் முனியசாமி, கோவிந்தன் கலந்து கொண்டனர்.