விஜயவாடா கனக துர்கா அம்மன் கோயிலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தரிசனம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2026 01:10
விஜயவாடா: திரௌபதி முர்மு, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார்.
இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சுவாமி வார்ல தேவஸ்தானத்துக்கு ஜனாதிபதி வருகை தந்தார். மாலை சுமார் 6 மணிக்கு விஜயவாடா விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, ஆளுநர் அப்துல் நசீர், தலைமைச் செயலர் சாய் பிரசாத், காவல்துறை தலைமை இயக்குநர் ஹரிஷ் குமார் குப்தா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாடு: தொடர்ந்து, கனக துர்கா அம்மன் கோயிலுக்குச் சென்ற ஜனாதிபதி திரௌபதி முர்முவை, மாநில உள்துறை அமைச்சர் வங்கலபுடி அனிதா, விஜயவாடா நாடாளுமன்ற உறுப்பினர் கேசினேனி சிவநாத், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ராதாகிருஷ்ணா ஆகியோர் வரவேற்றனர். கோயில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க அவரைச் சன்னதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், ஜனாதிபதி வேத ஆசிகளைப் பெற்றதுடன், பிரசாதமும் பெற்றுக்கொண்டார். கோயிலில் தரிசனத்துக்காகக் காத்திருந்த பக்தர்களைச் சந்தித்து வாழ்த்துகளையும் தெரிவித்தார். விஜயவாடாவில் நேற்று இரவு தங்கிய குடியரசுத் தலைவர், இன்று வியாழக்கிழமை கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள புன்னமி காட் பகுதியில் நடைபெறவுள்ள தேசிய சாரஸ் மேளாவைத் தொடங்கி வைத்தார்.