Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயில் படிகளில் அருவி ... சாரதா நவராத்தி விழா: ஸ்கந்த மாதா அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பு சாரதா நவராத்தி விழா: ஸ்கந்த மாதா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தசரா விழாவில் ஜம்பு சவாரி ஊர்வலம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தசரா விழாவில் ஜம்பு சவாரி ஊர்வலம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

16 அக்
2026
10:10

மைசூரு: தசராவை முன்னிட்டு, ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று கோலாகலமாக நடந்தது. மைசூரில் கம்பாலா போட்டி ஒத்திகையை, மக்கள் ஆர்வமாக பார்த்தனர்.


விஜயதசமியை முன்னிட்டு மைசூரில் தசரா பண்டிகை வெகுவிமரிசையாக நடக்கும் போது, பக்கத்து மாவட்டமான மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணாவிலும் தசரா கொண்டாடப்படுவது மன்னர் காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. இந்த ஆண்டிற்கான ஸ்ரீரங்கப்பட்டணா தசரா நேற்று துவங்கியது; வரும், 18ம் தேதி வரை நடக்கவுள்ளது. ஸ்ரீரங்கப்பட்டணாவில் தசரா துவக்க நாளிலேயே ஜம்பு சவாரி ஊர்வலம் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று காலை கிரங்கூர் கேட் பகுதியில் உள்ள, பன்னிமண்டபத்தில் இருந்து ஜம்பு சவாரி ஊர்வலத்தை, கன்னட மூத்த நடிகர் ரவிச்சந்திரன், நீர்ப்பாசன துறை அமைச்சர் செலுவராயசாமி, கலெக்டர் குமார் உள்ளிட்டோர் துவங்கி வைத்தனர்.


குதிரை படை: மொத்தம், 30 கிலோ எடையுள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் உற்சவர் சிலையை, மரத்தால் ஆன அம்பாரியில் வைத்து, தசரா யானை தனஞ்ஜெயா சுமந்து சென்றது. குவெம்பு சதுக்கம், ஜாமியா மசூதி, ராஜவீதி, அம்பேத்கர் சதுக்கம் வழியாக, ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலை அடைந்ததும், ஜம்பு சவாரி ஊர்வலம் நிறைவு பெற்றது. சாலையின் இருபுறமும் மக்கள் கூடி நின்று, ஜம்பு சவாரி ஊர்வலத்தை உற்சாகமாக பார்த்தனர். இந்த ஊர்வலத்தில் கலைக் குழுவினர் நிகழ்ச்சிகள், போலீஸ் படை, குதிரை படை அணிவகுப்பும் இருந்தது. அது போல, மைசூரு தசராவின் 5ம் நாளான நேற்று, மைசூரில் பல கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. மைசூரு நகரில் உள்ள பாரம்பரிய கட்டடங்களை பார்க்கும் வகையில், பாரம்பரிய நடை பயணத்தை சுற்றுலா துறை அமைச்சர் ஜார்ஜ் துவக்கி வைத்தார். யுவ தசராவில் பங்கேற்ற பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம், பல மொழிகளில் பாடல்களை பாடி அசத்தினார்.


50 கடைகள்: மைசூரு தசராவில் முதல்முறையாக, வரும் 19ம் தேதி கம்பாலா போட்டிகள் நடக்க உள்ளன. இதற்காக வெளிவட்ட சாலையின் சாத்தஹள்ளி பகுதியில், கம்பாலா ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, 150 ஜோடி எருதுகள் வருகின்றன. முதற்கட்டமாக 2 ஜோடி எருதுகள் மட்டும் வந்துள்ளன. அந்த எருதுகளை வைத்து நேற்று ஒத்திகை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நம் மன இருட்டை நீக்கி, தெளிவு என்கிற வெளிச்சத்தை வாழ்வில் ஏற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை இன்று ... மேலும்
 
temple news
திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று இரவில், ஸ்ரீ மலையப்ப ... மேலும்
 
temple news
பழநி: பராபவ ஆண்டு ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.பழநி முருகன் கோயிலில் பராபவ ஆண்டு ... மேலும்
 
temple news
வழக்கமாக புரட்டாசியில் வரும் சரஸ்வதி பூஜை இந்த ஆண்டு ஐப்பசியில் வருகிறது. வீணையோடு காட்சி தருபவள் ... மேலும்
 
temple news
சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்களை  முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar